ராஜபக்சேவை தூக்கிலிட கோரி களத்தில் இறங்கிய குழந்தைகள்

வெள்ளி, 22 மார்ச் 2013 (16:17 IST)
சேலத்தில் போர்குற்ற மற்றும் தமிழ் இன ஒழிப்பு செய்த ராஜபக்சேவை துக்கிலிடு என்றும், எங்கள் அண்ணனை கொன்றவர்களை தண்டியுங்கள் என்றும் கோரி கையில் கருப்பு கொடிக் கட்டி கல்லூரி, பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தொடக்க பள்ளி சிறுவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் ராஜபக்சேவை கண்டித்தும், பாலச்சந்திரன் படத்தையும் தாங்கியும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்கள் அப்போது 'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர். அப்போது சிறுவர்கள் "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது?

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்