யாரு‌க்கு ப‌க்‌தி அ‌திக‌ம் - கம‌ல்ஹாச‌ன் சொ‌ல்‌கிறா‌ர்

சனி, 26 மே 2012 (10:29 IST)
FILE
''கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியே இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம்'' நடிக‌ர் கமல்ஹாசன் கூ‌றினா‌ர்.

ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை திறந்து வைத்து பேசுகை‌யி‌ல், என்னை ஓவியங்களாக வரைந்து அவைகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார் ஸ்ரீதர். அந்த ஓவியங்களை எல்லாம் என் அலுவலகத்தின் முன்பு வைத்து இருக்கிறேன். நம் கலைகள் இன்னும் நவீனத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.

சினிமா மட்டுமல்லாமல், ஓவியங்களும் இப்போது டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கலைஞனை நம்பி செலவு செய்தால்தான் கலை வளர முடியும்.

கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம். அதேபோல் கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம். நானே வேறு படங்களை பார்க்கும்போது, நல்ல கலைஞனாக மாறியிருக்கிறேன் எ‌ன்று கமல்ஹாசன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்