மல்லியம்மன் கோ‌யிலில் குவிந்த ம‌க்க‌ள் கூ‌ட்ட‌ம்

திங்கள், 18 ஜனவரி 2010 (15:35 IST)
webdunia photo
WD
கடம்பூர் சாலை‌யிலுள்ள மல்லியம்மன் கோ‌யிலில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோபிசெட்டிபாளையம் தாலுக்கா டி.ஜி.புதூரை அடுத்துள்ளது கே.என்.பாளையம். இங்கிருந்து கடம்பூர் மலைக்கு செல்லும் சாலை‌‌யி‌ல் உள்ளது மல்லியம்மன் கோ‌யில். இது இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற கோ‌யிலாகும். இந்த கோ‌யிலில் முக்கிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் இந்த வழியாக செல்லும் பயணிகள் இந்த மல்லியம்மனை வணங்கிவிட்டு பிறகுதான் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். இந்த கோ‌யிலுக்கு காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள்.

கே.என்.பாளையம், காளியூர், பெரும்பள்ளம் அணை, அங்கணகவுண்டன்புதூர், கடம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோ‌யிலில் குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன்களை அம்மனுக்கு செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்