போக்குவரத்து விதி மீறல் அபராதம் 2 மடங்காக உயருகிறது

வெள்ளி, 23 டிசம்பர் 2011 (12:01 IST)
சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து விதி மீறல் அதிகரித்து வருவதையடுத்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதனையடுத்து விதிமீறல்களுக்கு அபராதத்தைக் கடுமையாக போக்குவரத்துக் காவல்துறை முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு தற்போது குறைந்தது ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.1100 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இது இனிமேல் ரூ.2,200ஆக அதிகரிக்கப்படும். போக்குவரத்துக் காவல்துறையின் இந்த கோரிக்கைக்கு தமிழக அரசும் செவி சாய்த்துள்ளது.

செல்பேசியில் பேசியபடியே வாகங்களை ஓட்டினாலும் இந்த அபராதத் தொகை பொருந்தும். வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றால் அபராதம் ரூ.300ஆக இருந்தது இனிமேல் அதிகமாகும் என்று தெரிகிறது.

அதேபோல் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டினால் ரூ.2500 அபராதம் விதிக்கபட்டு வருகிறது. இந்த விவகாரத்திலும் குடிமகன்கள் இனிமேல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது,

வெப்துனியாவைப் படிக்கவும்