பொ‌ங்க‌ல் ப‌ண்டிகை - ஈரோடு ஜவுளி சந்தையில் ஒரே நாளில் ரூ.20 கோடிக்கு விற்பனை

வியாழன், 12 ஜனவரி 2012 (16:08 IST)
தை பொங்கல் விற்பனை சூடு பிடித்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் ஒரே நாளில் ரூ. 20 கோடிக்கு ஜவுளிகள் விற்பனையானது.

தமிழர்களின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது தை பொங்கல் பண்டிகை. மற்ற பண்டிகைகள் ஒரே நாளில் முடிந்து விடும் ஆனால் தை பொங்கல் மட்டும் மூன்று நாட்கள் கொண்டாடும் பண்டிகையாகும். இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையை புத்தாடை அணித்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி ஈரோடு ஜவுளி சந்தையில் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கோர் குவிந்தனர். இவர்கள் மொத்தம் ரூ. 20 கோடி மதிப்பிலான ஜவுளிகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுக‌ை‌யி‌ல், ஒவ்வொரு வருடமும் தை பொங்கலை முன்னிட்டு ஈரோடு மார்கெட்டில் ஜவுளி விற்பனை மும்பரமாக நடக்கும். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது. காரணம் இந்த ஆண்டு மழை நன்றாக பெய்து மக்கள் கையில் பணபுழக்கம் அதிகம் இருப்பதால் வியாபாரமும் அதிகரித்துள்ளது என்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்