பிரபுதேவா மனைவி நீதிமன்றத்தில் மனு

திங்கள், 4 அக்டோபர் 2010 (12:25 IST)
திரைப்ப்ட நடிகை நயந்தாராவைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா அறிவித்ததையடுத்து அவரது மனைவியான் ரம்லத் என்கிற லதா குடும்பநல நீதிமன்றத்தில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மனு செய்துள்ளார்.

திருமணத்துக்கு தயார் ஆவதற்காக சினிமாவில் நடிப்பதையும் நயன்தாரா நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன்தான் நயன்தாராவின் கடைசி தமிழ்ப் படம். நயன்தாரா தந்த நெருக்கடியால்தான் திருமண அறிவிப்பை பிரபுதேவா வெளியிட்டார் என்றும் திரைப்பட வட்டாரத்தில் கூறப்பட்டது.

ஆனால் முதல் மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்யாமல் நயன்தாராவை மணந்தால் சட்ட சிக்கல் வரும் என்கின்றனர் வக்கீல்கள். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ரம்லத் தனது பெயரை லதா என மாற்றி இந்துவாக மாறியது கெஜட்டில் பதிவாகி உள்ளது. அதில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. ரேஷன் கார்டிலும் பெயர்கள் உள்ளன.

இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பிரபுதேவா என்றுதான் உள்ளது.

இந்நிலையில், அந்த மனுவில், ‘’என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நயன் தாரா தடுத்து வருகிறார்.. என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள்’’என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விரைவில் விசாரிக்க குடும்ப நல நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்