பா.ம.க. ‌விள‌ம்பர‌ங்களை அப்புறப்படுத்தாததால் ராமதாஸ், கோ.க.ம‌ணி மீது வழக்கு‌ப் பதிவு

கட்சி ‌விள‌ம்பர‌ங்களஅப்புறப்படுத்தாததால் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மீது ‌திரு‌த்த‌ணி கா‌வ‌ல்துறை‌யின‌ரவழக்கு‌பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு, தனியார் சுவர்களில் கட்சி விளம்பரம் செய்யக்கூடாது. போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

ஏற்கனவே எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை கட்சியினர் அழித்து வருகின்றனர். பெரு‌ம்பாலாட‌ங்க‌ளி‌லக‌ட்‌சி விளம்பர‌‌ங்க‌ள் அழிக்கப்படவில்லை.

திருத்தணி கமலா ரைஸ் மில் சுவரில் பா.ம.க போ‌‌‌ஸ்ட‌ர்க‌ ஏராளமாக ஒட்டப்பட்டிருந்தது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று கட்சியினருக்கு திருத்தணி காவ‌ல்துறை‌யின‌ரவேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போஸ்டர்களை பா.ம.க.‌வின‌ரஅப்புறப்படுத்தவில்லை.

இதையடுத்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, ஆர்.வேலு, திருவள்ளூர் மாவட்ட செயலர் செங்குட்டுவன் ஆகியோர் மீது காவ‌ல்துறை‌யின‌ரவழக்கு‌பதிவு செய்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்