பாராளுமன்றத்தை பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து புறக்கணிக்கும்: வெங்கையா நாயுடு

சனி, 1 செப்டம்பர் 2012 (17:58 IST)
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும்வரை பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும் ராஜ்யசபா எம்.பி-யுமான வெங்கையா நாயுடு இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எனவே, அதை வெளியேற்ற வேண்டும்.

பிரதமரை மட்டும் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தவில்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பதவி விலக வேண்டும் என்று கூறுகிறது.

ஏனெனில், 2-ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் வீட்டுவசதி உட்பட பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெற்றிருக்கிறது. அதுவரை பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் என்று வெங்கையா நாயுடு இன்று நிருபர்களிடம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்