பாரதிய ஜனதாவுடன் மதிமுக கூட்டணி - வைகோ பேட்டி!

புதன், 1 ஜனவரி 2014 (15:50 IST)
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து 1 மணி நேரம் பேசினேன். இந்த சந்திப்பின்போது மாநில தலைவர் பொன்ராதாகிருஷ் ணன் உடன் இருந்தார் என்று கூறியுள்ளார் வைகோ.
FILE

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் அரசை தோற்கடிக்க பா.ஜ., கூட்டணியில், மதிமுக இடம்பெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதனை தெரிவித்துள்ளார். பா.ஜ., கூட்டணியில் முதல் வரவாக, தமிழகத்தில் இருந்து மதிமுக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற, சக்தி வாய்ந்த, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரசை தோற்கடிப்பதற்காக அதற்கு மாற்று சக்தியாக விளங்கும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம்; கூட்டணிக்கான பூர்வாங்க பேச்சு நடைபெற்று வருகிறது; பிப்ரவரி 04ம் தேதி நடைபெறம் கட்சியின் பொதுக் குழுவில் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் மோடி அலை வீசுவது உண்மை; வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தோல்வியுறச் செய்து

FILE
பா.ஜ., தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையும்; மோடி நிச்சயம் பிரதமராவார்; லோக்சபா தேர்தலில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டால் உசிதமாக இருக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம்; மதிமுக.,வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காகவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்; வரும் லோக்சபா தேர்தலில் மதிமுக வெற்றி பெற்று தமிழக மக்களின் வாழ்வாதரத்தை பேணும் விதமாகவும், ஈழ தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும் பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்.

சமீபத்தில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நான் மேற்கொண்ட பயணத்தின் போது கிராமங்களில் மக்களிடம் நல்லதொரு வரவேற்பு இருந்தது; மக்களின் கவனம் மதிமுக.,வின் பக்கம் திரும்பி உள்ளது; மக்களின் இந்த வரவேற்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது; தேர்தல் பணிக்காக பொருளாளர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 3 முதல் 4 மாதங்களாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது; ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஊழலற்ற அரசியலை ஏற்படுத்துவதற்காகவும் உறுதி பூண்டுள்ளோம்; சுயமரியாதை கருதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தோம்; கொள்கைக்கு புறம்பாக மீண்டும் அத்தகையதொரு உடன்பாடு ஏற்பட வேண்டும் என நானோ எனது கட்சி தொண்டர்களோ ஒரு போதும் விரும்பவில்லை.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ, பா.ஜ.,வுடன் நிபந்தனையற்ற கூட்டணியே வைத்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும், நிபந்தனை விதிக்கும் நோக்கம் பா.ஜ.,வுக்கும் இல்லை என தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அவர்களுடன் கூட்டணி வைக்க தீர்மானித்திருப்பதாகவும், ஈழத் தமிழகர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை பா.ஜ., செய்யாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழகர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்காகவே இந்த கூட்டணி அமைப்பதற்கான முதல் காரணம் எனவும் வைகோ தெளிவுபடுத்தி உள்ளார்.

மீனவர் பிரச்சினை, தனி ஈழம் பிரச்சினை, மதுவிலக்கு பிரச்சினைக்காக தொடர்ந்து ம.தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது. இதற்காக நடைபயணம் மேற்கொண்டேன். நான் மக்களை சந்தித்தபோது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தினர். ம.தி.மு.க. பக்கம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்தலில் ஈழத்தமிழர்களை காக்க அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு ம.தி.மு.க.வை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது. அவர் பிரதமர் ஆவார். பாரதீய ஜனதாவுடன் நாங்கள் நிபந்தனையின்றி கூட்டணி சேருகிறோம். நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. அவர்களும் நிபந்தனை விதிக்கவில்லை. எங்கள் கட்சி பொதுக்குழு பிப்ரவரி 4-ந்தேதி கூடுகிறது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்

வெப்துனியாவைப் படிக்கவும்