பாஜக எனது உயிர்: சொல்வது ஷேக் சலீம்

புதன், 25 நவம்பர் 2015 (00:02 IST)
பாஜக எனது உயிர். அக்கட்சியைவிட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை என  முன்னாள் குடியரது தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.
 

 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின், பேரன் ஷேக் சலீம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.
 
இந்த நிலையில், அவர் பாஜகவில் இருந்து விலகியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தான் பாஜகவில் தொடர்வதாகவும், கட்சிக்காக உண்மையாக உழைத்து வருவதாகவும், எதிர்காலத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்