பள்ளியிலேயே சான்றிதழைப் பதிவு செய்யலாம் - வேலைவாய்ப்பு துறை

வெள்ளி, 10 மே 2013 (12:21 IST)
FILE
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே சான்றிதழை பதிவு செய்ய வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளின் இணையதளம் மூலமாக பிளஸ் 2 தேர்ச்சி சான்றிதழை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்று வழங்கப்பட்டதும் அந்தந்த பள்ளிகளில் மாணவ மாணவிகள் உடனே பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு பதிவு செய்யும் போது முதல் 15 நாட்களுக்கு ஒரே தேதியிட்ட அட்டை வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்யாமல் பிளஸ் 2 கல்வித் தகுதியை முதல் முறையாக பதிவு செய்ய விரும்பும் மாணவ மாணவிகள் குடும்ப அட்டையை உடன் எடுத்து செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்