’என் கணவரை பற்றி கேட்காதீர்கள்’ சீறும் ரம்யா!

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (09:58 IST)
இளையதலைமுறையினருக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா.


 


இவர், தொலைகாட்சியிலும், வானொலியிலும், விழாக்களிலும் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையே, இவர் 2014 ஆம் ஆண்டு, அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், அவரிடம், அம்மா வீட்டில் வாழ்ந்து வருவது குறித்தும், கணவர் குறித்தும் கேள்வி கேட்டால், பத்திரிகையாளர்களிடம் சீறுவதாக கூறப்படுகிறது. 

தற்போது, அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு, விளம்பர படங்களிலும், சினிமாவிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்