பன்றிக்காய்ச்சல் பீதி: இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

புதன், 12 ஆகஸ்ட் 2009 (20:32 IST)
பன்றிக்காய்ச்சல் பீதி காரணமாக, சென்னை இறைச்சிக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் 4 வயது சிறுவன் பலியான நிலையில், மேலும் பலர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, இறைச்சிக் கடைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

காற்றின் மூலம் பன்றிக்காய்ச்சல் பரவுவதால் இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை நகரில் பன்றிக்கறி விற்கவும், பன்றி வளர்க்கவும் ஏற்கனவே தடை உள்ளது. எனினும், இதையும் மீறி யாராவது பன்றிக்கறி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்