நிபந்தனையை தளர்த்தக்கோரிய நடிகை புவனேஸ்வரி மனு ‌நிராக‌ரி‌ப்பு

சனி, 31 அக்டோபர் 2009 (10:46 IST)
WD
பிணை நிபந்தனையை தளர்த்த கோரி விபசார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரியின் மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது வீட்டில் விபசாரம் செய்ததாக, பிரபல நடிகை புவனேஸ்வரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புவனேஸ்வரி சைதாப்பேட்டை பெருநகர 17-வது ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இருவரும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல் முறை ‌பிணை கிடைக்காத புவனேஸ்வரிக்கு, கடந்த 14ஆ‌ம் தேதி சைதாப்பேட்டை ‌நீ‌திம‌ன்ற‌ம் நிபந்தனை ‌பிணை‌யில் விடுதலை செ‌ய்தது. ‌நீ‌திம‌ன்ற நிபந்தனையின்படி, அவர் தினமும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சாஸ்திரி நகர் காவ‌ல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இதற்கிடையில், நேற்று புவேனஸ்வரி சைதாப்பேட்டை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ‌நீ‌திப‌தி பூபாலன் முன்பு வந்தது. அப்போது காவ‌ல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஜெயரத்னாகுமார், நடிகை புவனேஸ்வரி ‌பிணை நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ''புவனேஸ்வரிக்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் வழங்கிய நிபந்தனை ‌பிணை படி, மறு உத்தரவு வரும் வரை அவர் தினமும் காலையில் வீட்டின் அருகே உள்ள சாஸ்திரிநகர் காவ‌ல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும். ஆனால் கடந்த 3 தினங்களாக அவர் கையெழுத்து போடவில்லை. ‌நீ‌திம‌ன்ற உத்தரவை புவனேஸ்வரி மீறி உள்ளார். எனவே, அவரது ‌பிணை நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனுவை ‌நிராக‌ரி‌க்க வேண்டும். மேலும் புவேனஸ்வரிக்கு வழங்கிய ‌பிணையும் ரத்து செய்யவேண்டும்'' என கூறியிருந்தார்.

2 தரப்பு வாதங்களையும் கேட்ட ‌நீ‌திப‌தி பூபாலன், நடிகை புவனேஸ்வரி ‌‌பிணை நிபந்தனையை தளர்த்த கோரிய மனுவை ‌நிராக‌ரி‌த்ததோடு, மறு உத்தரவு வரும் வரை அவர் காவ‌ல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்