நாளை ‌‌மீ‌ண்டு‌ம் பழனியில் ரோப்கார் பயணம் தொட‌க்க‌ம்!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:38 IST)
ஒரு ஆண்டுக்கு பிறகு ரோப்கார் பயணம் நாளை மீண்டும் பழ‌‌னிய‌ி‌ல் தொடங்குகிறது.

கட‌‌ந்த ஆ‌ண்டு பழ‌னி‌யி‌ல் ரோ‌ப்கா‌‌ரி‌ல் பயண‌ம் செ‌ய்தபோது க‌யிறு அறு‌ந்து‌ ‌விழு‌ந்தது. இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ஒரே குடு‌ம்ப‌த்த‌ி‌ல் சே‌ர்‌ந்த மூ‌ன்று பே‌ர் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

இதை‌‌த் தொ‌‌ட‌ர்‌‌ந்து ரோ‌ப் கா‌ர் பயண‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌விப‌த்து ஏ‌ற்படாத வ‌ண்ண‌ம் புதிதாக ரோப்கா‌ரை த‌மிழக அரசு வடிவமை‌த்தது.

இதையடு‌த்து ரோ‌ப் கா‌ர் பயண‌‌‌ம் நாளை தொட‌ங்க‌‌ப்படு‌‌கிறது. இ‌ந்த ரோ‌ப் காரை அமைச்சர் பெரிய கருப்பன் இயக்கி வை‌க்‌கிறா‌ர்.

ரோப்கார் பாதையின் நீளம் 293 மீட்டர். மேல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள டவர்களின் உயரம் முறையே 12 மற்றும் 15 மீட்டர் ஆகும்.

பெட்டிகளுக்கும், தரைக்கும் இடையில் குறைந்தபட்ச உயரம் 11 முதல் அரை மீட்டராகவும், உயர்ந்தபட்ச உயரம் 14 முதல் 17 மீட்டராகவும் உள்ளது.

பயண நேரம் இர‌ண்டரை நிமிடம் முதல் இர‌ண்டே மு‌க்கா‌ல் நிமிடமாக இருக்கும். ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 600 முதல் 640 பக்தர்கள் வரை பயணம் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்