நாளை பிளஸ் 2 பொது‌த் தேர்வு தொட‌க்க‌‌ம்

செவ்வாய், 1 மார்ச் 2011 (13:35 IST)
தமிழக‌‌‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் நாளை தொடங்கு‌ம் பிளஸ் 2 பொது‌த் தேர்வை 7,80,631 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

தமிழக‌ம், புதுச்சேரியில் நாளை தமிழ் முதல் தாளுடன் பிளஸ்2 பொது‌த் தே‌ர்வு தொடங்குகிறது. இ‌ந்த தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னை‌யில் 445 பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.

புதுச்சேரியில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழக‌ம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை வாசிக்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை:

நாளை தமிழ் முதல் நாள்
3ஆ‌ம் தேதி - தமிழ் இரண்டாம் தாள்
7ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
8ஆ‌ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்
11ஆ‌ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.
14ஆ‌ம் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
17ஆ‌ம் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
18ஆ‌ம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
21ஆ‌ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
23ஆ‌ம் தேதி - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
25ஆ‌ம் தேதி - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

வெப்துனியாவைப் படிக்கவும்