நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம்: சரத்குமார்

திங்கள், 29 பிப்ரவரி 2016 (12:05 IST)
சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசியபோது,


 

மதுவிலக்கை படிப்படியாக எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி முதன்முதலில் திட்டம் வகுத்தது சமக. அதைப்போல நதிகளை தேசியமயமாக்குதல் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுத்தோம்.

நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கிடையாது. பிரதமராக வேண்டும் என்பதே எனது லட்சியம். தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி அமைந்தால் எனது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகத்தான் இருக்கும்.அ.தி.மு.க. கூட்டணியில்  நாங்கள் இருந்தபோது எனது பிரசாரத்தால் 8 சதவீத வாக்கு அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்