த‌மிழக ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை இ‌ன்று த‌ா‌க்க‌ல் - ஓ.ப‌ன்‌னீ‌‌ர் செ‌ல்வ‌ம் முத‌ன்முறையாக தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்

வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (08:20 IST)
தமிழக ச‌ட்ட‌ப்பேரவையில் 2011-2012ஆம் ஆண்டுக்கான ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முத‌ன் முறையாக இ‌ன்று தாக்கல் செய்கிறார்.

இதில், தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெறு‌கிறது.

நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறு‌கிறது.

அனைத்து‌க் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளு‌ம் இந்த கூட்டத்தில், ‌பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தந்த நாளில் எந்தந்த துறைக்கான மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்