தொடர் மின்வெட்டால் ஈரோ‌ட்டி‌ல் ஜவுளி உற்பத்தி பாதிப்பு

சனி, 26 நவம்பர் 2011 (14:48 IST)
ஈரோடு பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி உற்பத்தி பாதித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்தை அடுத்து முக்கிய தொழிலாக விளங்குவது ஜவுளியாகும். ஈரோடு மாவட்டத்தில் தொட்டம்பாளையம், தாசப்பகவுண்டன்புதூர், அந்தியூர் உள்ளிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோராபட்டு என்ற வகை சேலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதுதவிர சென்னிமலையில் பெட்சீட் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. சீனா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் கூட சென்னிமலை பெட்சீட்டிற்கு தனி மவுசு உள்ளது. கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் ஏற்படும் தொடர்மின்வெட்டின் காரணமாக ஜவுளி உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர்மின் வெட்டின் காரணமாக நாள் ஒன்றுக்கு 76 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்