தி.மு.க.வில் இணை‌கிறா‌ர் நடிகர் ராதாரவி

வியாழன், 19 மார்ச் 2009 (15:29 IST)
அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும், முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தப்பின் நடிகர் ராதாரவி கூறினார்.

நடிகரும், முன்னாள் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பினருமாராதாரவி நேற்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், முதலமைச்சர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் மரு‌த்துவமனையில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை சந்தித்தேன்.

முதலமைச்சர் கருணாநிதியுடனான உங்கள் சந்திப்பை தி.மு.க.வில் இணைவதற்கான முன்னோட்டம் என்று எடுத்துக்கொள்ளலாமா எ‌ன்றகே‌ட்டத‌ற்கு, ஆமாம். அப்படி எடுத்துக்கொள்ளலாம் எ‌ன்றா‌ரராதார‌வி.

அ.தி.மு.க.வில் இருந்து திடீரென்று விலகுவதற்கு என்ன காரணம் எ‌ன்ம‌ற்றொரகே‌ள்‌வி‌க்கப‌‌தி‌லஅ‌ளி‌த்ராதார‌வி, கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.

இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது சிறு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்து இருக்கிறேன்.

அ.தி.மு.க.வில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா? எ‌ன்றகே‌ட்டபோது, தொண்டர்கள் கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை எ‌ன்றா‌ர்.

முதலமை‌ச்ச‌ருடனாஇந்தசசந்திப்பை, ி.ு.க.விலநானஇணைவதற்காமுன்னோட்டமாஎடுத்துககொள்ளலாம். தாயகழகத்திலமீண்டுமஇணைகிறேனஎன்றாரராதாரவி.

வெப்துனியாவைப் படிக்கவும்