திசநாயகத்திற்கு தண்டனை: சென்னையில் கண்டனக் கருத்தரங்கம்!

புதன், 9 செப்டம்பர் 2009 (16:37 IST)
இலங்கையில் தமிழ் பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசநாயக்கத்திற்கு 20 ஆண்டுக்காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் அமைப்பான சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கண்டனக் கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளது.

பத்திரிக்கையாளர்களை ஒடுக்கும் சிறிலங்க அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்து வரும் சனிக்கிழமை சென்னை தியாகராயர் நகரிலுள்ள சி. தெய்வநாயகம் மேனிலைப் பள்ளியில் நடைபெறும் இக்கண்டனக் கருத்தரங்கில் கீழ்க்கண்ட பத்திரிக்கையாளர்கள் கருத்துரை வழங்குகின்றனர்:

1. திரு.இராஜேஷ் சுந்தரம் - துணை ஆசிரியர் ஹெட்லைன்ஸ் டுட
2. திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வம் - மூத்த பத்திரிக்கையாளர
3. திரு.எம்.ஜி. தேவசகாயம் - இந்திய ஆட்சிப் பணி (ஓய்வு)
4. செல்வி கவிதா முரளிதரன் - தி வீக
5. திரு.வெங்கடராமன் - மூத்த பத்திரிக்கையாளர், டைம்ஸ் ஆஃப் இந்தியா
6.திரு.பீர் மொஹம்மது - டெக்கான் கிரானிகிள்
7.திரு.அருள் எழிலன் - குங்குமம்
8.திரு. லெனின் - நக்கீரன்

வெப்துனியாவைப் படிக்கவும்