தாயை பிரிந்த குட்டி யானை வண்டலூர் பயணம் (பட‌‌ங்க‌ள்)

வியாழன், 2 பிப்ரவரி 2012 (08:53 IST)
webdunia photo
WD
ஈரோடு அருகே தாயை பிரிந்த குட்டியானையை வண்டலூர் உயிரின பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதிக்குட்பட்டது பூதிக்குப்பை வனப்பகுதி. கடந்த மாதம் இங்குள்ள பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த யானை கூட்டத்தில் ஆறு மாதம் கொண்ட ஒரு ஆண் குட்டி யானை ஒன்று அணையின் நீர்தேக்க பகுதியில் விரித்து வைத்திருந்த மீன் வலையில் சிக்கியது. இதனால் தன் தாய் யானையிடம் இருந்து பிரிந்தது.

webdunia photo
WD
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், மாவட்ட வனஅதிகாரி சதீஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு குட்டியானையை மீட்டு பவானிசாகர் வனஅலுவலகத்தில் வைத்து கடந்த ஒரு மாதமாக பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த குட்டியானையை வேன் மூலம் வண்டலõர் உயிரின பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இனி அந்த குட்டியானை நிரந்தரமாக வண்டலõர் பூங்காவில் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்