தாயை பிரிந்த குட்டியானை த‌வி‌ப்பு (பட‌ம்)

திங்கள், 28 நவம்பர் 2011 (10:28 IST)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானையை மூன்று முறை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும் அந்த குட்டி மீண்டும் வெளியே வந்தது. தொடர்ந்து தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது.

webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி பர்கூர் வனத்தின் அருகே உள்ள ஜர்த்தல் என்ற கிராமத்தின் அருகே ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது.

இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நின்று கொண்டிருந்த யானை குட்டிக்கு சுமார் ஆறு மாதங்கள் இருக்கும். அந்த குட்டி தாயைவிட்டு பிரிந்து வந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையின் அந்த குட்டியை வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.

மீண்டும் அது ஜர்த்தல் கிராமத்திற்கே வந்தது. மூன்று முறை அந்த யானைக்குட்டியை தாயிடம் சேர்க்க வனப்பகுதிக்குள் விட்டும் மீண்டும் கிராமத்திற்கே வந்தது.

யானைக்குட்டி மிகவும் சோர்வாக இருந்ததால் கால்நடை மருத்துவர் உதவியுடன் அதற்கு குல்கோஸ் தண்ணீர் கொடுக்கப்பட்டது. மீண்டும் இன்று தாயிடம் சேர்க்க முயற்சி நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்