தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமனம்

ஞாயிறு, 28 நவம்பர் 2010 (10:38 IST)
தமிழகக் காவல்துறை டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணுக்கு எதிராக தமிழ்நாடு தீர்ப்பாயத்தில், தீயணைப்பு துறை இயக்குனர் நடராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள நடராஜ், விஜயகுமார், போலோநாத், லத்திகா சரண், திலகவதி ஆகிய 5 பேரின் பட்டியலை தமிழக அரசு தயாரித்தது.

இந்த பட்டியல் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், டி.ஜி.பி.யாக தகுதியான நடராஜ், விஜயகுமார், லத்திகா சரண் ஆகியோரின் பெயர்களை தேர்வாணையம் இறுதி செய்தது.

இவர்களில் விஜய குமார் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டதால், நடராஜ், லத்திகா சரண் ஆகியோரின் நிர்வாகத்தில் அதிக நாட்கள் பணியாற்றி திறமையானவர்கள் என்ற முறையில் லத்திகா சரணை மீண்டும் டி.ஜி.பி.யாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் ஞான தேசிகன் பிறப்பித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்