தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்களை ஆத‌‌ரி‌த்தா‌ல் நடவடி‌க்கை: த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (10:21 IST)
தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌‌க்க‌ங்களை ஆத‌ரி‌‌த்து‌ப் பேசுபவ‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளது.

மேலு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் பட‌‌ங்க‌ள், கொடி, இல‌ச்‌சினைகளை (மு‌த்‌தி‌ரை) பொது ‌விள‌ம்பர‌ங்களு‌க்கு உபயோ‌கி‌த்த‌ல், ப‌த்‌தி‌‌ரி‌க்கை, தொலை‌க்கா‌ட்‌சி‌க‌ளி‌ல் ‌பிரசு‌ரி‌த்த‌ல், கா‌ண்‌பி‌த்த‌ல் ஆ‌கியவை Unlawful Activities (Prevention) Act, 1967 படி த‌ண்டனை‌க்கு‌ரிய கு‌ற்ற‌ங்களாகு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எனவே பொது‌க்கூ‌ட்ட‌ங்க‌ள், மாநாடு, பேர‌ணி போ‌ன்றவ‌ற்றை நட‌த்துபவ‌ர்க‌ள் யாரா‌யினு‌ம், எ‌ந்த அமை‌ப்பை‌ச் சா‌ர்‌ந்தவ‌ர்களா‌யினு‌ம் இதை மன‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்‌டு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இதனை ‌மீறுபவ‌ர்க‌ள் ‌‌மீது ச‌ட்ட‌ப்படி கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்