டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு தடை‌யி‌ல்லை

வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (11:32 IST)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கதடை‌ ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி மனுவை மதுரை உ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

''வருகிற 11ஆ‌ம் தேதி நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி. குருப்2 தேர்வுக்கு கார்பன் அடங்கிய விடைத்தாள் வழங்க வேண்டும்'' என்று கோரி, மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ஜி.தியாகராஜன், 2 மனுக்களை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஆஜரான அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஹெரால்டுசிங், ''இந்த தேர்வை 4 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்களுக்கான வினாத்தாள் தயாராக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் கார்பன் அடங்கிய பேப்பரை வழங்குவது என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் முடியாது. இந்த தேர்வுக்கு தடை விதித்தால் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்'' என்றார்.

இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர் ‌நீ‌திப‌திக‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்