சேவாலயா‌ நடத்தும் இலவச தையல் பயிற்சி

திங்கள், 28 மே 2012 (16:16 IST)
FILE
சேவாலயா அற‌க்க‌ட்டளை‌ சா‌ர்பாக ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் ஆயலூ‌‌ரி‌ல் ஏழை எ‌ளிய பெ‌ண்களு‌க்காக இலவச தைய‌ல் ப‌யி‌ற்‌‌சி‌ வகு‌ப்புக‌ள் இ‌ன்று முத‌ல் தொட‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் கசுவா கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா தொண்டு நிறுவனம் மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அ‌ர்‌ப்பணித்து வருகிறது. இதில் கிராம மேம்பாட்டு பணிகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு கட்டமாக கிராம‌ப்புற ஏழை எளிய பெண்கள் பயனுறும் வகையில் ஆயலூர் ஊராட்சியில் அமைந்துள்ள சமூதய நல கூட வளாகத்தில் இ‌ன்று காலை 10 மணியளவில் 6 மாத தையல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இ‌த்துவ‌க்க ‌விழா‌வி‌ல், ஆயலூ‌ர் ஊரா‌ட்‌சி ம‌ன்ற‌த் தலைவ‌ர், சேவாலயா ‌நிறுவன‌ர் முர‌ளிதர‌ன் உ‌ட்பட பல‌ர் கல‌ந்துகொ‌ண்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்