செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து நெ‌ல்ல‌ை‌க்கு சிறப்பு ரயில்

சனி, 7 பிப்ரவரி 2009 (14:37 IST)
கூ‌ட்ட நெ‌ரிசலை குறை‌க்கு‌ம் பொரு‌‌ட்டு வரு‌ம் 9ஆ‌‌ம் தே‌தி செ‌ன்னை எழு‌ப்பூ‌ரி‌ல் இரு‌ந்து ‌திருந‌ெ‌ல்வே‌லி‌க்கு ‌சிற‌ப்பு ர‌யி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெற்கு ரயில்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு வரும் 9ஆ‌ம் தேதி மாலை 6.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் (வ.எண்.0615) இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 12ஆ‌ம் தேதியில் இருந்து 26ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதே போல் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 13ஆ‌ம் தேதியில் இருந்து 27ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோ‌ல் கோவையில் இருந்து சென்னை சென்‌ட்ரலுக்கு 8ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (0618) இயக்கப்படுகிறது. வரும் 13ஆ‌ம் தேதியில் இருந்து மார்ச் 27ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சென்னை சென்‌ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் (0617) இரவு 10.20க்கு இயக்கப்படுகிறது.

அதே போல் கோவையில் இருந்து சென்‌ட்ரலுக்கு 15ஆ‌ம் தேதியில் இருந்து மார்ச் 29 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ர‌யி‌ல் (0618) இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்