சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (01:55 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 

 
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சேலம் மாவட்டம் நிர்வாகிகள் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், 50 சதவிகித அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரியும், அரசுத் துறைகளில் தனியார் மயம் நடைமுறைப்படுத்துவதை நிறுத்தக் கோரியும், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும். மேலும், பல்வேறு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். இந்த கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றக் கோரினர்.  அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்துவேம் என எச்சரிக்கை விடுத்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்