சமச்சீர் கல்வியை எதிர்த்தால் மெட்ரிக். பள்ளிகள் மீது நடவடிக்கை: த‌மிழக அரசு எச்சரிக்கை

திங்கள், 7 செப்டம்பர் 2009 (10:35 IST)
''சமச்சீர் கல்வி முறையை எதிர்த்து மெட்ரிக் குலேச‌ன் பள்ளிகள் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுபட்டால், அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு எச்சரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

WD
செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சமச்சீர் கல்வி முறையை எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்துவது குறித்து எல்லாரிடத்திலும் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்கப்பட்டது எ‌ன்று‌ம் போராட்டம், வேலை ‌நிறு‌த்த‌ம் ஆகிவற்றின் மூலம் தீர்வு காண முடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

மெட்ரிக் குலேச‌ன் பள்ளிகளுக்கு என்ன பிரசசனை என்று தெரிவித்தால் அதுகுறித்து பேச அரசு தயாராக உள்ளது எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த அமை‌ச்ச‌ர், தமிழகத்தில் 1.8 கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கின்றனர் எ‌ன்று‌ம் அவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்து கேட்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

மற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், ஒரு சங்கம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று‌ அமை‌ச்ச‌ர் தங்கம் தென்னரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்