சத்தி வரசித்தி விநாயகர் கோ‌‌யிலில் கஜபூஜை

புதன், 28 ஏப்ரல் 2010 (15:30 IST)
webdunia photo
WD
சத்தியமங்கலம் ஆத்துபாலம் அருகே உள்ள வரசித்தி விநாயகர் கோ‌யிலில் ஆறு யானைகள் கொண்ட கஜபூஜை நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஆத்துபாலம் அருகே உள்ளது வரசித்தி விநாயகர் கோ‌யில். இந்த கோ‌யில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக வரலாறு.

சித்திரை மாதத்தில் சூரியனுடைய ஒளிக்கதிர் நேராக விநாயகர் முகத்தில் விழுவதால் சூரியனே இந்த விநாயகரை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த கோ‌யில் கும்பாபிஷேகம் வரும் 30ஆ‌ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஆறு யானைகள் கொண்ட கஜபூஜை வழிபாடு கோ‌யில் வளாகத்தில் நடந்தது.

ஆறு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வடக்கு நோக்கி அதை வரிசையாக நிறுத்தி அதற்கு முன் யாகங்கள் நடத்தினர். சத்தியமங்கலத்தில் முதன்முதலாக கஜபூஜை நடந்ததால் இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்