சட்டமன்றத்தில் பேச முடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசப்போகிறேன் - விஜயகாந்த்

வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:43 IST)
மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோவையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் கலந்துக்கொள்ள வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சட்டப்பேரவைக்கு வர தைரியம் இருக்கிறதா? என்று அ.தி.மு.க.வினர் கேட்டுள்ளனர்.

துணிவில்லாமலா தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்?

அவர்களது தலைவர் அவ்வாறு சென்று வர முடியுமா?

எந்த கோரிக்கை வைத்தாலும் தட்டி கழிக்கிறார்கள்.

மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. உரிமை மறுக்கப்படுகிறது.

தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் நிதியில்லை என்று சாக்கு போக்கு கூறுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சிகள். மக்கள் பிரச்சினைகளை இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்