கோவில் சொத்து பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை: இந்து முன்னணி பாராட்டு

சனி, 15 மே 2010 (16:19 IST)
கோயில் சொத்துக்களை பாதுகாப்பது குறித்து அரசு எடுத்த முடிவுக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்தும், அந்த நிலங்களில் நீண்ட நாட்களாக குடியிருந்தும் வருகின்றனர்.

ஆனால் அரசு நிர்ணயித்துள்ள அடிமனை வாடகையும் கூட செலுத்தாமல் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருந்தும் வருகின்றனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முன்னோர்கள் பலர் தங்களது சொத்துக்களை கோவில்களுக்கு கொடுத்துள்ளனர்.தற்போது இந்த சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டசபையில் விளக்கம் அளிக்கையில், கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்பது, அந்த சொத்துக்களை சீராக பராமரிப்பது அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.கோவில்களில் திருட்டுக்கள் மற்றும் மோசடிகிளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கும்,கோவில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததற்கு தமிழக அரசை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமகோபாலன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்