கூட்டணி யாருடன்? கட்சியினருடன் விஜய்காந்த் ஆலோசனை

ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (13:34 IST)
FILE
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

மனு கொடுத்தவர்களிடம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று நேர்காணல் நடத்தினார்.

இதற்காக விஜயகாந்த் காலை 9.30 மணிக்கு தலைமை அலுவலகத்துக்கு வந்தார். 10 மணி அளவில் நேர்காணல் நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் நாளான இன்று தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம் (தனி), நாகப் பட்டினம் (தனி), கடலூர், விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஆகிய 10 தொகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். தொகுதிக்கு 20 முதல் 25 பேர் வரை வந்து இருந்தனர்.

நேர்காணலுக்கு கல்வி சான்றிதழ், கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ்

ஆகியவற்றுடன் வந்து இருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே நேரத்தில் 5 பேர் நேர்காணலுக்கு அழைக் கப்பட்டனர்.

தொகுதி நிலவரம் குறித்து அவர்களிடம் விஜயகாந்த் கேட்டறிந்தார். மேலும் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? பாரதீய ஜனதா வுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளை விஜயகாந்த் கேட்டார்.

தனித்து போட்டியிட்டு கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று சிலரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்