குலுக்கல் முறை‌யி‌ல் வீடு கிடைக்காதவர்களுக்கு கட்டணம் வாப‌ஸ்: கருணாநிதி!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:41 IST)
சென்னை, முகப்பேர் பகுதியிலதமிழ்நாடு வீட்டு வசதி வாரிகுடி‌யிரு‌ப்பு ‌வீடுக‌‌ள் கே‌ட்டு வி‌ண்ண‌ப்‌பி‌த்தவ‌ர்களு‌க்கு குலுக்கல் முறையில் ‌வீடு ‌கிடை‌க்க‌வி‌ல்லையெ‌‌ன்றா‌ல் ப‌தி‌வு‌க்க‌‌ட்டண‌ம் ‌திரு‌ப்‌பிய‌ளி‌க்க‌ முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "சென்னை, முகப்பேர் பகுதியில் மத்திய தர மக்கள் வசிக்கக் கூடிய அளவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 170 குடியிருப்புகளை குலுக்கல் முறையில் விற்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு செய்துள்ளது.

இதுவரை 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பதாரர்களிடம் இருந்து மனுவிற்காக ரூ.110‌், அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்கையில் பதிவுக் கட்டணமாக ரூ.400‌் வீட்டு வசதி வாரியத்தால் பெறப்படுகிறது.

விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் மத்திய தர மக்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த வீடுகளுக்காக விண்ணப்பம் செய்து செப்டம்பர் 30ஆ‌ம் தேதி நடைபெறவுள்ள குலுக்கலில் ‌வீடு கிடைக்காதவர்களுக்கு வீட்டு வசதி வாரியம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணமான ரூ.400 மீண்டும் அவர்களிடம் திருப்பியளிக்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" எ‌ன்று கூறப் பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்