குட்டி தஞ்சாவூர் போல காட்சியளிக்கும் கோபிசெட்டிபாளையம் வயல் பகுதி

திங்கள், 13 ஜூலை 2009 (09:33 IST)
WD
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வயல்பகுதி குட்டி தஞ்சாவூர் போல காட்சி அளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் ஆகும். எங்கு பார்த்தாலும் நெற்பயிர் வயலே இப்பகுதியில் காணப்படும். அதே போல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி பாசனப்பகுதியும் இதுபோல் காட்சியளிக்கிறது.

இந்த பாசனப்பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த பாசனப்பகுதியில் தொட‌ர்ந்து தண்ணீர் விடுவதால் தற்போது நெற்பயிர் பசுமையாக கண்களுக்கு எட்டும்வரை காட்சியளிக்கிறது.

பொதுவாக சினிமா சூட்டிங் எடுப்பது குறித்து கோபிசெட்டிபாளையத்தை சின்னகோடம்பாக்கம் என்று அழைப்பார்கள். அதே போல் நெற்பயிர் வயல்களால் காட்சியளிக்கும் கோபிசெட்டிபாளையத்தை குட்டி தஞ்சாவூர் என்றும் அழைக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்