குஜராத் வளர்ச்சியடைந்ததாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது - ஜெயலலிதா

Ilavarasan

வியாழன், 17 ஏப்ரல் 2014 (16:54 IST)
குஜராத் தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கிருஷ்ணகிரியில் இன்று பேசினார்.
 
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ஜெயலலிதா, நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முதன்மையானது என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுவிட்டது.
 
வாய்பாய் ஆட்சி காலத்தில், நாட்டில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை இணைக்க ரூ.100.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகாநதி, கோதாவரி, காவிரி நதிகளை இணைக்க பாஜக உறுதி அளிக்குமா? காவிரியில், தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர பாஜக உறுதி அளிக்குமா? நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கத் தேவையான ரூ.6,500 வழங்க தயார் என்று பாஜக கூற முடியுமா என்று ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
 
மேலும், அனைத்துத் துறைகளிலும் குஜராத்தைக் காட்டிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்