காவு வா‌ங்கு‌‌ம் திம்பம் கொண்டை ஊசி வளைவு (படம்)

வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (10:57 IST)
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் மிகவும் குறுகலாக உள்ள 20 வது கொண்டை ஊசிவளைவை விரிவு படுத்தினால் பல உயிர்களை காப்பாற்ற முடியும். ஆகவே தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் இந்த வளைவை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட பகுதியாகும். இங்கு எப்போதும் ஜில் என்று இருப்பதால் இதை குட்டி கொடைக்கானல் என்றும் அழைப்பார்கள். மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தின் எல்லை பகுதி என்பதால் இந்த வழியாக போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

பண்ணாரி கோவிலில் இருந்து தொடங்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை 209 மலைப்பாதை மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இதில் ஆறு, எட்டு, இருபத்தி ஏழு உள்ளிட்ட வளைவுகள் மிகவும் குறுகலானவை என்றாலும் ஆபத்தானவை அல்ல. ஆனால் ராய்க்கல் சுற்று என்று முன்னும் தற்போது "எஸ்' வளைவு என்று அழைக்கப்படும் 20 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலானது மிகவும் ஆபத்தானதாகும்.

காரணம் இந்த குறுகலான வளைவில் வாகனங்கள் திரும்ப முடியவில்லை என்றால் ஆயிரம் அடி கொண்ட பள்ளத்தில்தான் விழவேண்டிய நிலைதான். இதுவரை பல வாகங்கள் இந்த ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்து பல உயிர்கள் இறந்து விழுந்த வாகனங்களை மீண்டும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இருபதாவது கொண்டை ஊசி வளைவின் மேற்கு பகுதிதான் ஆயிரம் அடி ஆழம் கொண்டதாகும். கிழக்கு பகுதியில் இடம் அதிகமாக உள்ளது. இந்த இடத்தை சமன் செய்து இந்த கொண்டை ஊசி வளைவை விரிவு படுத்தினால் பல <உயிர்களை காப்பாற்ற முடியும். இதற்கு தேசிய நெடுஞ்சாலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்