காவிரி சிக்கலில் 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதில் - உச்சநீதிமன்றம்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (14:52 IST)
FILE
தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில், 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசின் இன்று விசாரணைக்கு வந்தது. நீர் பகிர்வுக்காக சுதந்திரமான குழுவை ஏன் அமைக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு மனுவில், "நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு பல நாட்கள் ஆகியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம்சாற்றியுள்ளது.

அப்போது கர்நாடக அரசு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்குகள் இழுவையில் உள்ள போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கூடாது என்று வாதம் செய்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் கோரிக்கை மனு மீது மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் கோரிக்கை குறித்து கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்