காதர்மொய்தீன் எம்.பி. பதவியை பறிக்ககோரி வழ‌க்‌கு!

திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:51 IST)
காத‌ர்மொ‌ய்‌தீ‌‌‌னி‌ன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ப‌றி‌க்க‌க் கோ‌ரி இந்திய ூனியன் முஸ்லிம்லீக் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌‌‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌க்க‌‌‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலாளர் தாவூத்மியாகான் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், வேலூர் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் காதர் மொய்தீன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தமிழ்மாநில முஸ்லிம்லீக் தலைவராக இருக்கிறார்.

அகில இந்திய இந்திய ூனியன் முஸ்லிம் லீக் செயலாளராகவும் உள்ளார். ஒரு கட்சியில் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரா‌கி ‌விட்டு வேறு கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவர் பதவியை பறிக்க வேண்டும்.

இது சம்பந்தமாக நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் புகார் கொடுத்தேன். அங்கு உறு‌ப்‌பினராக இருக்கும் ஒருவர்தான் புகார் கொடுக்க முடியும் என்று கூறி என் மனுவை அவை‌த் தலைவ‌ர் தள்ளுபடி செய்து விட்டார். அவை‌த் தலைவ‌ரி‌ன் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர் பதவி பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தர விடவேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி தாவூத்மியாகானு‌க்கு ‌நீ‌திப‌தி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்