கவிஞர் வாலியின் மனைவி திலகம் மரணம்

திங்கள், 14 செப்டம்பர் 2009 (19:27 IST)
பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலியின் மனைவி திலகம் (வயது 70) உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.

சென்னை பட்டினம்பாக்கம் கற்பகம் நகரில் உள்ள வாலியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த திலகத்தின் உடலுக்கு, கனிமொழி எம்.பி., கவிஞர் வைரமுத்து, திரைப்பட நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

திலகத்தின் இறுதிச் சடங்குகள் பெசன்ட்நகர் மயானத்தில் நாளை நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்