கருத்துக் கணிப்பு வெளியிட்ட தனியார் டி.வி.மீது நடவடிக்கை

ஞாயிறு, 1 மே 2011 (11:52 IST)
தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை அமல் செய்யப்பட்டிருந்தும் அதனை மீறி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கருத்து கணிப்பு வருகிற 10-ந்தேதி வரை வெளியிடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் எற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி கடந்த 28-ந்தேதி தனியார் ஆங்கில தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டது.

தேர்தல் நடத்தை விதியை மீறி கருத்து கணிப்பு வெளியிட்ட ஆங்கில தொலைக் காட்சி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நாளை நோட்டீசு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்