கணவரை 3 முறை சுட்டுக் கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை!

சனி, 2 மார்ச் 2013 (14:56 IST)
FILE
சென்னை: 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடசென்னை பகுதியில் தன் கணவனை குழந்தைகள் முன்பு துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுக் கொலை செய்த பிரமீளா குமாரி என்ற 36 வயது பெண்மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரமிளாவும் அவரது கணவர் மாணிக்சந்தும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் இங்கு சென்னையில் பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் மானிக்சந்த் தினமும் கடுமையாகக் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு நடந்த வண்ணம் இருந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே பிரமீளாவுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

குடும்பத்தை நடத்த பணமே கொடுக்காத மாணிக்சந்த் தினமும் குடித்து விட்டு வருவது மனைவிக்கு ஆத்திரத்தை உள்ளூர அதிகப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் 2006, செப்டம்பரில் ராஜஸ்தான் சென்ற பிரமீளா அங்கு நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்து அலமாரியில் மறைத்து வைத்தார்.

அக்டோபர் 23, 2006ஆம் ஆண்டு குழந்தைகளை எழுப்பி விட்ட பிரமீளா, தூங்கிக் கொண்டிருந்த கணவனை சுட திட்டமிட்டாள். ஆனால் அதற்குள் கணவன் மாணிக்சந்தும் எழுந்து நின்றார். அப்போது 3 முறை கணவனை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார் பிரமிளா. ரத்த வெள்ளத்தில் பிணமாகச் சாய்ந்தார் மாணிக்சந்த். பிறகு தற்கொலை செய்து கொள்ள முயன்றார் பிரமீளா ஆனல் முடியவில்லை. இந்த வழக்கில் இவர் 3 மாதம் சிறையில் இருந்து பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியேவந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் வாக்குமூலம் மற்றும் நேரடி சாட்சியாக இருந்த குழந்தைகள் இருவரும் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க நீதிபதி கலிய மூர்த்தி அரசு தரப்பு வாதங்கள் நிரூபணத்துடன் இருப்பதால் பிரமீளா குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்