கட்டபொம்மன் அரசு விழாவில் டி.எஸ்.பி.க்கு கத்திக்குத்து

சனி, 15 மே 2010 (15:32 IST)
தூத்துக்குடி அருகே நடைபெற்ற கட்டபொம்மன் அரசு விழாவில் ஏற்பட்ட கலவரத்தின்போது மர்ம நபர்கள் காவல்துறை டி.எஸ்.பி.கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது.இங்கு கட்டபெட்ம்மன் குல தெய்வமான வீரசக்க தேவி ஆலய 54 ஆவது வழிபாட்டு விழா, கட்டபொம்மன் விழா நடைபெற்று வருகிறது.

இதனையொ, கீழவேலாயுதபுரம் கிராமத்தில் இருந்து கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லப்பட்டது.

கட்டபொம்மன் கோட்டையில் நடந்த அரசு விழாவில் தூத்துக்குடி ஆட்சியர் கோ. பிரகாஷ், திமுக, எம்.பி. ஜெயதுரை மற்றும் கட்டபொம்மன் வாரிசுகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழா நடந்துகொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர்.இதில் பல வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இதனால் ஜோதி கொண்டு சென்றவர்கள் ஆத்திரமடைந்து, மதுரை - தூத்துக்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த வழியாக வந்த ஒரு பேருந்து கண்ணாடி உடைந்தது.

மேலும் விளாத்திகுளம் டி.எஸ்.பி. லயேலா இக்னேஷியஸ் ஜீப் கல்வீசி தாக்கப்பட்டது.

அப்போது, ஏ.டி.எஸ்.பி.மார்ஸ்டன் லியோ மற்றும் ஏட்டுக்கள் படு காயமடைந்தனர்.மேலும், டிஎஸ்பி லயேலா இக்னேஷியஸை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி, தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தெட்டர்பாக 2000 பேர் மீது ‌சட்டவிரோதமாக ஆயுதங்களை பயன்படுத்தியது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முவுவதும் பதற்றம் நிலவுவதால் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்