கடலோர தமிழகம், புதுச்சேரி‌யி‌ல் மழை ‌நீடி‌க்கு‌ம்!

சனி, 4 டிசம்பர் 2010 (16:26 IST)
கடலோர தமிழகம், புதுச்சே‌ரி‌யி‌ல் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உள் தமிழகம், தெற்கு கடலோர ஆந்திரா,கேரளா, இலட்சத்தீவு‌‌வி‌ல் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

ராயலசீமா, வடக்கு கடலோர ஆந்திரா‌வி‌ல் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌‌வி‌த்துள்ளது.

கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா‌வி‌ல் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

தெலுங்கானா, வடக்கு உள் கர்நாடகா‌வி‌ல் வறண்ட வானிலையே காண‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எ‌ன்று‌ம் சில இடங்களில் கனமழையு‌ம், ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

த‌‌மிழக‌த்த‌ி‌ல் தரைக்காற்று சில சமயங்ளில் வலுத்து வீசக்கூடும் எ‌ன்று‌ம் செ‌ன்னை‌யி‌ல் குறைந்தபட்ச வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்