கடலூர் ‌சிறை‌யில் கைதி தற்கொலை

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:51 IST)
எ‌‌ய்‌ட்‌‌ஸ் நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த செ‌ன்னையை சே‌ர்‌ந்த கை‌தி கடலூ‌‌ர் ‌சிறை‌யி‌ல் த‌ற்கொலை செ‌ய்து‌ கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சென்னை புளியந்தோப்பு கனகராயர் முதலியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அமுல் பாபு (29). இவர் திருட்டு, வழிப்பறி வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

தண்டனை கைதியாக வேலூர் மத்திய ‌சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டிருந்த பாபு, கடந்த மாதம் 14ஆ‌ம் தேதி கடலூர் மத்திய ‌சிறை‌யில் அடைக்கப்பட்டார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கை‌தி அமுல்பாபுவுக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனா‌ல் மனம் உடைந்து காணப்பட்ட பாபு ே‌ற்‌றிரவு ‌சிறை‌யில் இருந்த சுவற்றில் தலையால் முட்டி தற்கொலைக்கு முயன்று‌ள்ளா‌ர்.

இதில் பலத்த காயம் அடைந்த பாபுவை ‌சிறை வா‌ர்ட‌ன்க‌ள் கடலூர் அரசு மரு‌த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செ‌ன்றனர். ஆனால் வழியிலேயே கை‌தி அமு‌ல்பாபு இறந்து போனா‌ர்.

இது கு‌றி‌த்து முதுநகர் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இத‌னிடையே கை‌தி த‌ற்கொலை கு‌றி‌த்து கடலூர் ஆர்.டி.ஓ. செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்