ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுக்கான சி.டி. வெளியிடப்பட்டது

சனி, 15 மே 2010 (20:00 IST)
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான ஒலி மற்றும் ஒளி குறுந்தகடு இன்று வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த `உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு' மைய நோக்கப் பாடலுக்கான ஒலி, ஒளி குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவிலேயே முதல் முறையாக இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் கிராமி விருது பெற்றதற்கான பாராட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் செம்மொழி பாடலுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில் கூறியதாவது:

இவ்வளவு பெரிய விழாவில் நான் இசையமைத்த பாடல் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை மூன்று தலைமுறை பாடகர்களை பாட வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.அது நிறைவேறி விட்டது.

இந்த பாடல் இசையமைக்க மூன்று மாதம் ஆனது.இதற்கு பொறுமையாக காத்திருந்தவர்களுக்கு நன்றி.

இந்த பாடல் நன்றாக வரவேண்டும் என்று உழைத்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தப் பாடலை எப்படி எல்லாம் இயக்க வேண்டும் என்று கௌதம் மேனன் கனவு கண்டாரோ, அப்படியே நிறைவேறியிருக்கிறது.

எல்லா விதமான இசைகளையும் இந்த பாடலில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.அது நிறைவேறியிருக்கிறது.எல்லா புகழும் இறைவனுக்கே என்றார் ரகுமான்.

வெப்துனியாவைப் படிக்கவும்