எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

வியாழன், 19 ஜனவரி 2012 (20:17 IST)
புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வே‌‌ண்டு‌‌ம் எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திய ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதிய வாடகை ஒப்பந்தத்தினை உடனடியாக நிறைவேற்ற வே‌‌ண்டு‌‌ம் எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம், இன்றுடன் 7 ஆவது நாளை எட்டியது. இதனா‌ல் கே‌ஸ் த‌ட்டு‌ப்பாடு அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

இந்நிலையில் போரா‌ட்ட‌த்தை முடிவு‌க்கு கொ‌ண்டு வர சென்னையில் இ‌ன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள், அரசு தரப்பு மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆகிய முத்தரப்பு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து,தங்களது ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இன்று நள்ளிரவு முதலே லாரிகள் இயக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்