ஊருக்கு உபதேசம் செய்யும் போலீஸ்களின் முறையற்ற உறவுகள்

புதன், 1 ஜனவரி 2014 (10:30 IST)
FILE
தாலி கட்டிய மனைவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, 2 குழந்தை பெற்ற வேறொருவர் மனைவியை காதலிக்கும் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

தாலி கட்டிய மனைவியை தவிக்க விட்டுவிட்டு, அடுத்தவர் மனைவியை அபகரித்து வாழும் கலாசாரம் சென்னை போலீசில் தற்போது மோசமாக பரவி வருகிறது. மாதம் இரண்டு அல்லது 3 புகார்கள் இதுபோல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 3 புகார்கள் இதுபோல் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபோல் கொடுக்கப்பட்ட புகாரில், புழல் போலீசாரால், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது மனைவியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அபகரித்துக்கொண்டதாக கடந்தவாரம் புகார் கொடுத்தார். அந்த மனுவிசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் வசிக்கும், செந்தில்குமாரி (வயது 31) என்ற பட்டதாரி பெண், நேற்று கண்ணீர் விட்டு அழுதபடி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது போலீஸ்கார கணவர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் பி.எஸ்சி. படித்துள்ளேன். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர் திருட்டு வழக்கில் கைதாகி இருக்கிறார். அவர் பணியில் இருந்து இடை நீக்கமும் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை மறைத்து, என்னை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், எனது கணவர் எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் கொண்டார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்கிறார். என்னை தூக்கி எறிந்துவிட்டு, எனது கணவர் இப்போது எதிர்வீட்டு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். அந்த பெண்ணின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை எனது கணவர் அவரது நெஞ்சில் பச்சை குத்தி உள்ளார். இதுகுறித்து நான் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன்.

அவர்கள் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை. திருமணத்தின்போது, எனக்கு எனது பெற்றோர் கொடுத்த வரதட்சணை பணம் மற்றும் நகைகளை மட்டும் வாங்கிக்கொடுப்பதாக சொன்னார்கள். தற்போது எனது கணவர் என்னிடம் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார். அவரோடு வாழும் எதிர்வீட்டு பெண், அவரது கணவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

சட்டத்தை காப்பாற்றும் பணியில் இருக்கும் எனது கணவர், அவரே சட்டத்தை மதிக்காமல் நான் இருக்கும்போதே, இன்னொருவர் மனைவியுடன், முறையற்ற வாழ்க்கை நடத்துகிறார். இதை வேடிக்கை பார்க்காமல், அவர் மீது விரைவான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். அவர் மீது இலாகாபூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

யாராவது மாட்டிவிட்டால் உபதேசம் இலவசம் என்ற அளவுக்கு ஊருக்கு உபதேசம் செய்யும் போலீஸ் கும்பலின் பொது வாழ்க்கைதாந்ன் முறையற்று இருக்கிறது என்றால் சொந்த வாழ்க்கையும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது!

வெப்துனியாவைப் படிக்கவும்