உள்ளாட்சி தேர்தலால் பிரிண்டிங் பிரஸ்கள் "பிஸி''

திங்கள், 3 அக்டோபர் 2011 (10:30 IST)
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நோட்டீஸ் அடிப்பதில் தீவிரமாக இருப்பதால் பிரிண்டிங் பிரஸ்கள் தற்போது பிஸியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மாநகர மேயர் பதவியில் இருந்து பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வரை ூற்றுக்கணக்கானோர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து அவர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டு போட்டிபோடும் நிலைக்கு வந்துவிட்டது. இனி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் இவர்களின் முக்கியவேலையாகும்.

இதனால் ஈரோடு பகுதி பரபரப்பாக மாறியுள்ளது. வேட்பாளர்கள் பிரிண்டிங் பிரஸ்களை முற்றுகையிட்டுள்ளனர். காரணம் தன்னை தேர்ந்தெடுத்தால் என்னசெய்யபோகிறேன் என்ற வாக்குறுதிகள் மற்றும் தங்கள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட நோட்டீஸ்கள் அடிப்பதற்கு இவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக புரட்டாசி மாதம் எந்த முகூர்த்தமும் இல்லாத காரணத்தால் பிரிண்டிங் தொழிலில் சற்று சுனக்கம் ஏற்படும் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் வரபிரசாதமாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்